சூப்பர் ஸ்டாருக்குப் போட்டியாக பவர் ஸ்டார்?!!


சென்னை: காமெடியில் கலக்கும் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் தனக்கு தானே வைத்துக் கொண்ட பெயருக்கும் ஒரு பவர் இருக்கத் தான் செய்கிறது.
கோலிவுட்டில் உள்ள எத்தனையோ ஹீரோக்கள், காமெடியன்களுக்கு ரசிகர்கள் பல்வேறு பட்டங்களை அளித்துள்ளனர். இருப்பினும் அவரவர் பெயரைச் சொல்லி தான் அழைக்கின்றனர். என்ன தான் நாம் கமலை உலக நாயகன் என்றும், அஜீத்தை தல என்றும், விஜயை இளைய தளபதி என்றும் கூறினாலும் பேச்சு வாக்கிலும் சரி எழுத்திலும் சரி அவர்களின் பெயரைத் தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.
ஆனால் ரஜினிகாந்தை மட்டும் பெரும்பாலும் சூப்பர் ஸ்டார் என்றே அழைக்கிறோம். இப்பொழுது ரஜினிக்கு போட்டியாக ஒருவர் வந்துள்ளார். பயந்துடாதீங்க முழுதாகப் படியுங்கள். ஸ்ரீனிவாசன் என்ற அந்த நடிகரின் பெயரைக் கூறினால் யாருங்க அவர் என்று கேட்கும் மக்கள் பவர் ஸ்டார் என்று கூறினால் அப்படி தெளிவாகச் சொன்னால் தானே தெரியும் என்கின்றனர்.
தனக்குத் தானே பவர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்துக் கொண்டார் அவர். இந்நிலையில் ரசிகர்கள் அவரது நிஜப்பெயரை பயன்படுத்துவதே இல்லை. மாறாக பவர் ஸ்டார் என்றே அழைக்கின்றனர். ஏன் பலருக்கு அவரது நிஜப்பெயரே தெரியவில்லை. இந்த ஒரு விஷயத்தில் தான் அவர் ரஜினிக்கு போட்டியாக வந்துள்ளார் என்றோம்.

No comments:

Post a Comment